ரிம 130 மில்லியன் சைபர் குற்றம்: 7 மலேசியர்களை தீவிர வேட்டை
- kumara885
- Nov 1, 2025
- 1 min read

கோலாலம்பூர் - கம்போடியாவில் ரிம130 மில்லியன் பெருமானமுள்ள சைபர் குற்றத்தில் ஈடுபட்டதாக சிங்கப்பூர் அரசாங்கத்தால் தேடப்பட்டுவரும் 7 மலேசியர்களை அரச மலேசிய காவல் படை தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது.
நேற்று சிங்கப்பூர் போலிஸ் படையிடமிருந்து 27 சிங்கப்பூரியர்கள், ஏழு மலேசியர்கள் இந்த ரிம130 மில்லியன் சைபர் குற்றவியல் மோசடி வேளையில் ஈடுபட்டுள்ளதாக தவல் பெறப்பட்டது என்று புக்கிட் அமான் குற்றவியல் விசாரனைதுறை இயக்குனர் டத்தோ எம்.குமார் உறுதிப்படுத்தினார்.
"இந்தத் தகவல் பெறப்பட்டதை அடுத்து மலேசிய காவல் படை அந்த ஏழு மலேசியர்களையும் தேடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது.
"இவ்விவகாரத்தில் நாங்கள் சிங்கப்பூருக்கு உதவி தேடப்பட்டுவரும் 7 குற்றவாளிகளையும் கைது செய்து ஒப்படைபோம்," என்று சூளுரைத்தார்.
அந்த ஏழு மலேசியர்களும் விசாரணைக்கக முக்கியமாகத் தேடப்பட்டுவரும் நபர்கள் பட்டியலில் சிங்கப்பூர் அரசாங்கத்தால் சேர்க்கப்பட்டுள்ளதாக மேலும் நேற்று நள்ளிரவு வெளியிட்ட அறிக்கை வழி கூறினார்.
"அரச மலேசிய காவல் படை நாட்டின் பாதுகாப்பையும் மக்களையும் அச்சுருத்தும் எல்லை கடந்து நடைபெறும் குற்றங்களைக் களைவதில் சிங்கப்பூருடன் கைகோர்த்து வேட்டையாடும் என்றார்.





Comments