top of page

லாரி உட்பட 4 வாகனங்கள் மோதிக்கொண்டதில் அறுவர் காயம்

kumara885
Oct 24, 2025
1 min read


கிள்ளான்- ஜாலான் புக்கிட் செராக்கா நான்கு முச்சந்தி சளாலை சமிக்ஞையில் ஏற்பட்ட விபத்தில் அறுவர் காயம் அடைந்துள்ளனர்.


சுமார் காலை மணி 10க்கு ஏற்பட்ட அவ்விபத்தில் இரு லாரியும் காரும் ஈடுபட்டுள்ளது என்று வடக்கு கிள்ளான் மாவட்ட போலிஸ் துணைத் தலைவர் சூப்பரின்தெண்டன் முகமட் றஹிமி ஜைனோல் உறுதிபடுத்தினார்.


சம்பவத்தின் போது காலை 8.57 மணி அளவில் மண் ஏற்றிவந்த லாரி மேட்டிலிருந்து இறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து முன்று வாகனங்களை மொதியது.


இவ்விபத்தில் ஆறு பேர் காயமடைந்த வேளையில் அனைவரும் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டனர் என்றார்.


இதனிடையே 35 வயது லாரி ஓட்டுநர் சொர்ப்ப காயங்களுடன் உயிர்தப்பிய வேளையில் காவல் துறைக்கு அடுத்த நடவடிக்கைக்காக அழைத்து செல்லப்பட்டான்.


Comments


bottom of page