லங்காவி படகு கவிழ்ந்த சம்பவம்: இறந்தவர்கள் எண்ணிக்கை 34ஆக உயர்வு

லங்காவி- இங்குள்ள லங்காவி தீவு கடல் அருகே கள்ளக்குடியேரிகள் பயணம் செய்த படகு கவிழ்ந்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 34ஆக உயர்ந்துள்ளது.
இன்று, மேலும் ஐந்து பிணங்களை மீட்புப் படையினர் லங்காவி நீரிணையில் தாய்லாந்து-மலேசியா எல்லை கடல்பகுதியில் கண்டெடுத்துள்ளனர்.
அதில் 25 கள்ளக்குடியேறிகளின் உடல்கள் மலேசிய நீரிணையில் மீட்கப்பட்ட வேளையில் மீதமுள்ள பிணங்கள் தாய்லாந்து நீரிணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுவரை, 14 கள்ளக்குடியெறிகள் உயிர்பிழைத்துள்ள வேளையில் அவர்கள் அனைவரும் மலேசிய நீரிணையில் காப்பாற்றப்பட்டனர், என்று பெர்லிஸ், கெடா மாநில மலேசிய மாரிட்டிம் நடவடிக்கை நிறுவனத்தின் இயக்குனர், முதல் தளபதி ரொம்லி முஸ்தஃபா உறுதிபடுத்தினார்.
இன்று கண்டெடுக்கப்பட்ட ஐந்து பிணங்களும் ஆண் ஆடவர்களாவர் என்று அவர் மேலும் சொன்னார்.
“ காலை மணி சுமார் 10.1ரளவில், கடல் போலிசார் முதல் ஆண் சடலத்தை பூலாவ் சிங்கா பெசார் அருகே கண்டெடுத்தனர்.
“இரண்டவது கள்ளக்குடியேரியின் சலடத்தை பூலாவ் அனாக் டாத்தாய் அருகே உள்ள சின் சின் நீரிணையில் தீயணைப்பு மீட்புப் படையினர் மீட்டனர்," என்று அறிக்கையில் இன்று கூறினார்.
இதனிடையே மூன்றாம் சடலத்தை மாலை 3.16 மணிக்கு பூலாவ் ரெபாக் பெசார் அருகே கண்டெடுக்கப்பட்ட வேளையில் நான்காவது ஆடவரின் சடலம் சில நிமிடங்களுக்குப் பிறகு தஞ்சோங் ஹுலோர் அருகே கண்டு மீட்டனர்.
“ஐந்தாவது ஆடவரின் சடலம் தீயணைப்புப் படையின் ஹெலிகாப்டர் பூலாவ் ரெபாக் பெசார் அருகே கண்டுபிடித்து மீட்டது," என்றார்.





Comments