top of page

வீட்டு வேலை என ஏமாற்றி பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 7 இந்திய நாட்டுப் பெண்கள் காப்பாற்றப்பட்டனர்

  • kumara885
  • Oct 21, 2025
  • 1 min read

வீட்டு வேலை என ஏமாற்றி பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 7 இந்திய நாட்டுப் பெண்கள் காப்பாற்றப்பட்டனர்



கோலாலம்பூர் அக்டோபர் 19- வீட்டுப் பணிப்பென் வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி அந்நியப் பெண்களை வழுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஆள் கடத்தல் கும்பல் முறியடிப்பு.


புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குனர் டத்தோ எம். குமார் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.


ஆள் கடத்தல் முறியடிப்பு சிறப்புக் குற்றத் துடைத்தொழிப்புப் பிரிவு படை தலைநகரிலுள்ள தங்கும் விடுதி ஒன்றில் சோதனையை மேற்கொண்டது.


சோதனை இறுதியில் அங்கே 7 இந்திய குடியுரிமையுடைய பெண்கள் அடைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.


சுமார் 25முதல் 40 வயதுக்கு உட்பட்ட அப்பெண்கள் அனைவரையும் இந்த ஆள் கடத்தல் கும்பல் வீட்டு பணிப்பென் நிறைவான ஊதியத்துடன் வாங்கித் தருவதாகக் கூறி மலேசியாவிற்குக் கொண்டு அவர்களை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர்.


மேலும் சில பெண்கள் அக்கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டும் மிரட்டலுக்கும் உள்ளாகினர் என்று தொடர் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாக குமார் மேலும் கூறினார்.


இதனிடையே காவல் தனிப்படை இந்த ஆள் கடத்தல் கும்பலைச் சேர்ந்ததாக சந்தேகிகப்படும் 21 முதல் 63 வயதுக்குட்பட்ட 12 பேரை கைது செய்தது.


அந்த 12 நபர்களில் இருவர் மலேசியர்கள் மேலும் இதர 10 பேர் இந்தியாவைச் சேர்ந்த நான்கு பெண்கள் ஆறு ஆண்களாவர்.


கைதுசெய்யப்பட்ட அனைவரும் இந்தியப் பெண்களை மனித கடத்தல் வியாபாரத்தில் ஈடுபடுத்தியவர்கள் என்று தெரிய வந்துள்ளது.


இவர்கள் அனவரும் கடந்த அக்டோபர் 17ஆம் நாள் தலைநகரிலுள்ள குற்றவியல் செஷன் நீதிபன்றத்தில் ஆள்கடத்தல் மற்றும் அனுமதிக்கப்பட தவணைக்கும் மேல் கள்ளத்தனமாக குடியிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.


Comments


bottom of page