விரோதம் காரணமாக தோட்ட உரிமையாளருக்கு கத்தி குத்து
- kumara885
- Nov 4, 2025
- 1 min read

குவந்தான் – விரோதத்தின் காரணமாக தோட்ட விவசாயி ஒருவார் ஆடவரால் கத்தி குத்துக்கு ஆளானார்.
இச்சம்பவம் இங்குள்ள கம்பாங் கம்போங் ஶ்ரீ டாமாயில் வெள்ளியன்று நிகழ்ந்தது என்று குவந்தான் மாவட்ட காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் அஷாரி அபு சாமா கூறினார்.
சுமார் இரவு 7 மணிக்கு அச்சம்பவத்தில் பதிக்கப்பட்ட 38 வயஹ்து தோட்ட விவசாயி வீட்டின் முன் அந்த ஆசாமியால் தாக்கப்பட்டார்.
சந்தேகத்துக்குரிய 25 வயது ஆசாமி தோட்ட விவசாயி வீட்டிற்கு வந்து அவரை வெளியே வரும்படி அழைத்து பேசியது இருவருக்கும் வாய் தகராறு நடந்துள்ளது என்று முதல் கட்ட விசாரணையின் வழி தெரிய வந்துள்ளது.
“சந்தேகத்துக்குரிய ஆசாமி விவசாயியை தனது நண்பன் பார்க்க விரும்புவதால் தன்னோடு வரும்படி பணித்துள்ளான்.
"அவனது கோரிக்கை மறுத்ததும், உடனே அந்த சந்தேகத்துக்குரியா ஆடவன் கால் சட்டியின் பின்னால் வைத்திருந்த கத்தியை உருவி விவசாயி வயிற்றில் குத்திவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்," என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
இச்சம்பவத்தில் வயிற்றில் ஏற்பட்ட காயத்தோடு குவந்தான் பொது மருத்துவமனையில் உடனடி சிகிச்சைக்காக விவசாயி கொண்டுசெல்லப்பட்டார்.
அவரது உடல் நிலை தற்போது சீராக இருப்பதாக அஷாரி உறுதிப்படுத்தினார்.
இச்சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே அந்த ஆசாமி போலிசாரால் தேடப்பட்டு இறுதியில் ஜாயா காடிங் காவல் நிலைய போலிசாரால் கையும் கலவுமாக பிடிபட்டான்.
“பாதிக்கப்பட்ட விவசாயி இந்த சந்தேகத்துக்குரிய ஆசாமி போதைப்பொருள் நடவடிக்கையில் ஈடுபட்டது குறித்து போலிசாரிடம் புகரளித்ததால் தாக்கப்பட்டதாக தொடர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலிஸ் தற்போது இந்த சம்பவத்தை செக்ஷன் 324 பிரிவின் கீழ் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயம் விளைவித்ததற்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





Comments