வெளிநபரின் புகாரை ஏற்ற ஃபீஃபாவின் நடவடிக்கை வியப்புக்குறியது
- kumara885
- Oct 26, 2025
- 1 min read

வெளிநபரின் புகாரை ஏற்ற ஃபீஃபாவின் நடவடிக்கை வியப்புக்குறியது
பெட்டாலிங் ஜெயா- யாரோ சம்பந்தமில்லாத வெளிநபர் ஒருவரின் புகாரை ஏற்று விசாரித்த உலகக் கால்பந்து சம்மேளனத்தின் செயல் அதிர்ச்சியளிக்கின்றது என இடைக்கால ஜோகூர் சுல்தான் தெங்கு மாஹ்கோத்தா இஸ்மாயில் வேதனையைப் பகிந்துக்கொண்டார்.
ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் தகவல்படி அப்புகார் வியேட்னாம் காற்பந்து சங்கத்தின் தலைவரோ அல்லது பொதுச்செயலாளரோ இப்புகாரைக் கொடுக்கவில்லை.
மறாக அடையாளதெரியாத வியட்னாம் பொதுநபர் தான் அப்புகாரைக் கொடுத்ததாக தகவல் பெறப்பட்டது.
"ஆயினும்,இந்த அந்நியரின் புகாரை ஃபிபா செவிமடுத்ததுதான் சற்று வியப்பாக இருக்கிறது," என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த பாரம்பரிய வெளிநாட்டு விளையாட்டாளர்கள் குறித்து இன்னும் நிறைய புகார்கள் ஃபீபாவிடம் நிச்சயம் சென்றிருக்குமென்று தாம் பெரிதும்நம்புவதாக அவர் மேலும் சொன்னார்.
மேலும்,புகார் கொடுத்த அந்த நபர் குறித்த எந்த ஒரு உண்மை அடையாளம், தகவலும் என்னிடம் இல்லை என்றார்.
"எனக்கே வியப்பாக உள்ளது ஆனால் இதுதான் நான் ஆசியக் காற்பந்து சம்மேளனத்திடமிருந்து பெற்ற தகவலாகும்," என்று அவர் சொன்னார்





Comments